லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.  கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.குறிப்பாக தளபதி விஜய் மாஸ் ஸ்டெப் போட்ட வாத்தி கம்மிங் பாடல் டிக்-டாக்கில் செம்ம பிரபலம். பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக்கில் நடனமாடி அசத்தியுள்ளனர்.

 தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக நேரலையில் பேட்டி அளித்த இசையமைப்பாளர் அனிருத் வீட்டிலேயே மாஸ்டர் படத்திற்கான இசை கோர்ப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி ரெய்டு பாடலுக்கு கம்போசிங் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், காலை 6:45 மணிக்கு ஸ்டுடியோவில்  வாத்தி ரெய்டு பாடலின் Beat முதன் முறையாக கேட்டபோது என கூறி மெய்மறந்து அந்த மியூசிக்கிற்கு ஸ்டெப் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..