லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் நவம்பர் 10ம் தேதி முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்க படவேண்டும் என கூறியுள்ளது. திரையரங்குகளுக்கும் தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்களை திரையிட தயாராகி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் குறித்த அல்டிமேட் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர்  படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக திரைப்படம், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators தெரிவித்துள்ளது. இந்த தகவலே விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.