லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது அனைவரும் அறிந்தது தான்.

தீபாவளிக்காவது 'மாஸ்டர்' வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும், பொங்கலுக்கு கில்லியாக திரையரங்கில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ படக்குழு அறிவித்துள்ளது. 

இதனிடையே தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள், மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வந்ததாலும், 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளதாலும், மத்திய அரசும் இதனை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டதால், மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் 'மாஸ்டர்' படக்குழுவினர் தினமும் சரியாக 6 மணிக்கு புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று, தளபதி சும்மா அல்டிமேட்டாக வில்லன்களை புரட்டி எடுக்கும் புரோமோ வெளியாகியுள்ளது. குறிப்பாக இதில் "கைய ஒடச்சிகிட்டு திரும்பி திரும்பி பார்த்துகிட்டு இன்ஸ்டால்மெண்டலலாம் போடக்கூடாது.. நய்யப்புடை என பஞ்ச் பேசியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் இந்த புரோமோ இதோ...