கோலிவுட் திரையுலகத்தில், வியாபாரத்திலும், வசூலிலும் உச்சம் தொட்ட நாயகனாக வளர்ந்து நிற்பவர் தளபதி விஜய். அதே போல் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இவரின் அடுத்த பலம் என்றும் கூறலாம். எனவே இவரை வைத்து படம் தயாரிக்கவும், எடுக்கவும் பலர் போட்டி போட்டு வருகிறார்கள்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பிகில்' கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும்,  200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

மேலும் அடுத்தாக ரசிகர்கள், தளபதி நடிப்பில் உருவாகி உள்ள, 'மாஸ்டர்' படத்தை பார்க்க மரண வெயிட்டிங். குறிப்பாக தளபதி  இசை வெளியீட்டு விழாவில் பேசியதை கூட தற்போது வரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள், என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இது ஒரு புறம் இருக்க, தளபதியின், 'மாஸ்டர்' பட வியாபாரம் குறித்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, பிரபல சினிமா விமர்சகர் மற்றும் முன்னணி பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்துள்ள பேட்டியில்....

மாஸ்டர் படத்தின் வியாபாரம் ரூ 230 கோடி, என தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான பிகில் படத்தின் வியாபாரத்தை விட 30 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஸ்மி தலைவர் சூப்பர் ஸ்டாரை தளபதி வியாபாரத்தில் எப்போதோ முந்திவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம்... கொரோனா பாதிப்பால் ரிலீஸ் தேதி தள்ளி போகவும் வாய்ப்புள்ளது.