தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை பகிர்ந்து, அதில் நான் எங்கு இருக்கிறேன் என கண்டு பிடியுங்கள் என, ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாடல், நடிப்பு என இரண்டிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து கோலிவுட் திரையுலகில் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா.  குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறைவிருக்காது. அதே போல் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தேர்வு செய்து நடித்த,  தரமணி, அவள், வடசென்னை ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் ரீதியாக இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

தற்போது, தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட ஆண்ட்ரியா குறித்து பேசிய விஜய், ஆண்ட்ரியா செலக்ட்டிவாக நடித்து வருவதாகவும், நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் இவர், தற்போது தன்னுடைய பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை, பதிவு செய்து தன்னுடைய இசை பயிற்சி குறித்து பேசியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு டெஸ்ட் வைக்கும் விதமாக, இந்த புகைப்படத்தில் நான் எங்கு இருக்கிறேன் என்பதை கண்டு பிடியுங்கள் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பலர், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.