Actor Vijaysethupathi : பிரபல நடிகர் விஜய்சேதுபதி விரைவில் வெளியாகவிருக்கும் "கரா" என்ற படத்தில் ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

தனது இயல்பான மற்றும் துணிச்சலான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கதாபாத்திரத்திற்கு தான் செட்டாகிவிட்டால் போதும், அந்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் அதில் நடிக்கும் ஒரு மிகச்சிறந்த கலைஞனாக விளங்கி வருகிறார் விஜய் சேதுபதி. 

பல்வேறு திரைப்படங்களில் தனது நண்பர்களுக்காக கேமியோ கதாபாத்திரங்கள் கூட அவர் ஏற்று நடித்து வந்துள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அவர் தற்பொழுது "மகாராஜா" மற்றும் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "ட்ரெயின்" ஆகிய இரு திரைப்படங்களில் இப்போது ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். 

Ajith Hospitalized: அஜித்துக்கு மூளையில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளதா? தீயாய் பரவும் தகவல்..! பதறிய ரசிகர்கள்.!

இந்த சூழ்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி பவானியாக நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள "கரா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்பொழுது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி "காதல் குமார்" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் "கரா" படத்தில் இருந்து நாளை மாலை வெளியாக உள்ளது. 

Scroll to load tweet…

அந்த பாடலை பாடியது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் விஜய் சேதுபதி அவர்கள் அறிமுகமாகின்றார். இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட ஒரு பதிவில், தனது அண்ணன் விஜய் சேதுபதிக்கு இதற்காக நன்றி தெரிவிப்பதாக கூறி நெகிழ்ந்துள்ளார். இந்திய அளவில் முதலைகளை மையமாக கொண்டு உருவாகும் பெரிய படம் இதுவென்றும் கூறப்படுகிறது.

உண்மையை மறைத்த பரணி... கண்டுபிடித்த ஷண்முகம் - அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்