பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகளான மாளவிகா மோகன். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தில், மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  

இந்த படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மாளவிகா மோகனன் மிரட்டியெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் தனது அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா மோகனனை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வந்தனர். ஆனால் அப்படி மாளவிகா மோகனன் நடத்திய அதிரிபுதிரி போட்டோ ஷூட் தான் இப்ப சூப்பர் வாய்ப்பு ஒன்ன வாங்கி கொடுத்திருக்கு. 

தற்போது 'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் பேவரட் இயக்குநரான ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாராம். 

சமீபத்தில் சென்னையில் மாளவிகா மோகனனை நேரில் சந்தித்த இயக்குநர் ஹரி, கதை மற்றும் மாளவிகா மோகனனின் கேரக்டர் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.