லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் "மாஸ்டர்". இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், கைதி அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. 

"பேட்ட" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், ஒரு சில காட்சிகளே நடித்திருந்தாலும் தனது அழகால் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார்.

விதவிதமான கவர்ச்சி உடைகளில் மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிங்க் நிறத்தில் ரெட் டாட்டுகள் போட்ட ஒன்சைடு ஓப்பன் டிரெஸில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனின் புகைப்படங்கள் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

தளபதியின் ஹீரோயின் என்பதால் மாளவிகா மோகன் நடத்தியுள்ள இந்த ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தனது அசத்தல் அழகால் தமிழக ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள மாளவிகா மோகனனின் இந்த கவர்ச்சி போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஸ்ட்ராபெர்ரி பெண்ணாக ஜொலிக்கும் மாளவிகா மோகனின் இந்த அசத்தல் புகைப்படங்களுடன் #MalavikaMohanan என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 


இதற்கு முன்னதாக ’ஜோக்கர்’ பட நாயகி ரம்யா பாண்டியன், தனது இடையழகை காட்டி ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்கானது. தற்போது பிங்க் நிற உடையில் மாளவிகா மோகனன் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவை தெறிக்க வைத்துள்ளது.