பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இன்று நிரூப் - சுருதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது...

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றனர். 

இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee), மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகினர். இதுதவிர கடந்த வாரம் வனிதா தானாகவே வெளியேறினார். அவருக்கு பதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ் உள்ளே சென்றார். 

பிக்பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ஏரியா என சிகரெட் பிடிப்பதற்கென தனி அறை ஒன்று இருக்கும். அங்கு நடப்பவற்றை இதுவரை நடந்த 5 சீசன்களில் காட்டியதில்லை. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அங்கு நடப்பவையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அண்மையில் நடிகை அபிராமி, சக ஆண் போட்டியாளர்களுடன் இணைந்து தம் அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அதன்படி இந்த வாரம் பஞ்சாயத்து டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலாவும், அபிராமியும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் டாஸ்க் இறுதியாக திருமண நிகழ்வு நடைபெறுகிறது...மைனராக நடிக்கும் நிரூப்க்கும்...எதிர் தரப்பில் இருக்கும் சுருதிக்கும் மணமுடித்து போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது... 

View post on Instagram