ரசிகர்களை கொந்தளிக்க வைத்த வதந்தி.. லியோ பட போஸ்டர் பாணியில் டீல் பண்ண நடிகை திரிஷா - வைரல் ட்வீட்!
தமிழ் திரையுலகை பொறுத்தவரை, இளைஞர்களின் மனம் கவர்ந்த பல நாயகிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவராலும் ஒருசேர, ஆண்டுகள் பல கடந்தும் கொண்டாடப்பட்டு வரும் ஒரே ஒரு நடிகை என்றால் அது நிச்சயம் திரிஷா மட்டும் தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா, மற்றும் 96 மட்டுமல்லாமல் இவர் நடித்த எல்லா தமிழ் திரைப்படங்களும் பலராலும் இன்றளவும் ரசித்து பார்க்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் 40 வயதை தொட்டுவிட நடிகை திரிஷா அவ்வப்போது திருமணம் சம்பந்தமான சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் தான் சில தினங்களுக்கு முன்பு அவருக்கும் ஒரு மலையாள திரைப்பட தயாரிப்பாளருக்கும் திருமணம் நடவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே தயாரிப்பாளர் வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷாவின் கல்யாணம், பாதியில் முறிந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்று முதல் திரிஷா, பல முறை திருமண சர்ச்சையில் சிக்கி வருகின்றார் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக, தனது திரையுலக வாழ்க்கையில் முதன் முதலாக திரிஷா மலையாள படங்களில் நடிக்கவுள்ள நிலையில் அண்மையில் வெளியான வதந்தி அவருடைய ரசிகர்களை பெரிய அளவில் கொதிப்படைய செய்தது.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷா ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”, “KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS! என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது திருமண குறித்த வதந்திகளை எதிர்த்து, தான் தளபதி விஜயுடன் நடித்துள்ள லியோ பட போஸ்டர்கள் பாணியில் திரிஷா தனது பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.