ஜெயிலர் பட பாணி.. இயக்குனருக்கு Sweet Surprise கொடுத்த மார்க் ஆண்டனி தயாரிப்பாளர் - ஆதிக் ஹாப்பி அண்ணாச்சி!
Adhik Ravichandran : பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படமான மார்க் ஆண்டனி.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி ரவிச்சந்திரனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் போட்டி போட்டு தங்களுடைய நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தினார்கள்.
இந்த மெகா ஹிட் திரைப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வழங்கியிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான "திரிஷா இல்லனா நயன்தாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஆதித் ரவிச்சந்திரன்.
ராமுடன் கைகோர்க்கும் சியான்.. விரைவில் வரப்போகுது விக்ரம் 63 அப்டேட்? - தயாரிப்பாளர் யார் தெரியுமா?
அந்த திரைப்படத்தில் இவர் ஒரு கேமியோ செய்திருப்பார், அதேபோல அதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" திரைப்படத்தையும் இவர் இயக்கி வெளியிட்டு இருந்தார். இறுதியாக இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான பிரபுதேவா நடிப்பில் வெளியான பஹீரா திரைப்படத்தை அதிக ரவிச்சந்திரன் இயக்கியிருந்த நிலையில் அது பெரிய அளவில் ஹிட் ஆகாமல் போனது.
ஆனால் அவருடைய இந்த எட்டு வருட திரை வாழ்க்கையில் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாக மாறி உள்ளது மார்க் ஆண்டனி. பட்டி தொட்டி எங்கும் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்பொழுது அமேசான் பிரைம் OTT தளத்திலும் பெருந்தொகைக்கு இந்த திரைப்படம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள், ஒரு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரை தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D