Asianet News TamilAsianet News Tamil

கடவுள் கிட்ட சரண்டர் ஆக வந்தேன்... திருப்பதியில் சாமி தரிசனம் செய்தபின் நடிகர் விஷால் பேச்சு

மார்க் ஆண்டனி படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நடிகர் விஷால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

Mark Antony hero vishal visit tirupati temple gan
Author
First Published Sep 14, 2023, 12:57 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஷால் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த நடிகர் விஷாலிடம் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்த விஷால் பல ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஷால் நாளை எனது படம் மார்க் ஆண்டனி பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. படக்குழு அனைத்தும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதியாக கடவுளின் ஆசிர்வாதத்திற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வங்கி கடன் கோரப்பட்டுள்ளது. 

விரைவில் அந்த கடன் கிடைத்துவிடும் எங்களது பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டிடம்  கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சந்திரபாபு நாயுடுவை கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சந்திரபாபு கைது செய்யப்பட்டது குறித்து அறிந்தேன் ஆனால் எதற்காக, யார், கைது செய்தார்கள் என்பது தெரியாது. தெரியாததை நான் பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... டாடிக்கு நோ சொல்லிவிட்டு டாடாவை தட்டிதூக்கிய ஜேசன் சஞ்சய்... விஜய் மகன் பட ஹீரோ குறித்து வெளிவந்த ஹாட் அப்டேட்

Follow Us:
Download App:
  • android
  • ios