டாடிக்கு நோ சொல்லிவிட்டு டாடாவை தட்டிதூக்கிய ஜேசன் சஞ்சய்... விஜய் மகன் பட ஹீரோ குறித்து வெளிவந்த ஹாட் அப்டேட்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்க உள்ள முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Vijay son Jason sanjay
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தந்தையை போல் நடிகராக களமிறங்காமல் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய், தன் முதல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். விரைவில் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jason sanjay debut movie
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கான கதாபாத்திர தேர்வு மற்றும் ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக் இப்படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என தகவல் பரவியது. பின்னர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும் இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக மற்றுமொரு ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... குஷி படத்தில் சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் லிப்லாக் காட்சிகள் நிறைந்த ‘ஆராத்யா’ வீடியோ சாங் இதோ
Kavin
அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள இப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் பிசியான ஹீரோவாக உருவெடுத்துள்ள கவின் கைவசம் ஏற்கனவே ஸ்டார் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படமொன்று இருக்கும் நிலையில், அவர் லைன் அப்பில் தற்போது ஜேசன் சஞ்சய்யின் படமும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Kavin, Anirudh
அதுமட்டுமின்றி ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். இப்படி முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் பல்வேறு திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சிம்பிளாக நடந்துமுடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் காதல் திருமணம் - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்