Marina is not only a struggle but also a film that will no longer be filmed.
சென்னை மெரினா கடற்கரையில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சென்னைக்கு அழகு சேர்ப்பதே மெரினா கடற்கரைதான். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை என்ற பெயரை மெரினா பெற்றுள்ளது.
இந்த மெரினாவில் பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் முதல் இப்போது கலர்ஃபுல் படங்கள் வரை அனைத்துப் படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், “இனி மெரினா முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை சினிமா படப்பிடிப்பு நடத்தக் கூடாது” என தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும், “பகல் நேரங்களில் சென்னையின் நகர்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை” போடப்பட்டுள்ளது.
மெரினாவில் நடந்த சல்லிக்கட்டு புரட்சிக்கு பிறகு கூட்டம்போட தடை என்றது தமிழக அரசு. தற்போது சினிமா படப்பிடிக்கும் தடைப் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
