அர்னால்ட் - மரியா ஜோடி கடந்த 2011-ம் ஆண்டே விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து தான் நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

பாடி பில்டிங் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அர்னால்ட் தான். அவர் 74 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள அர்னால்ட்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் அவருக்கு மவுசு அதிகம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், நடிகர் அர்னால்ட் தற்போது தனது மனைவி மரியாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த ஜோடி கடந்த 1986 இல் திருமணம் செய்து கொண்டது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த 2011-ம் ஆண்டே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து அந்த ஆண்டே விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

விண்ணப்பித்து 10 ஆண்டுகள் கழித்து தான் நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது. இவ்வளவு கால அவகாசம் எடுப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், அர்னால்ட் மற்றும் அவரது மனைவி பெயரில் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 

ஆனால் இவற்றை எப்படி பிரிப்பது மற்றும் ஜீவனாம்சம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்த்து வைப்பது.. என்பது நீதிமன்றத்துக்கு பெரும் தலைவலியாக இருந்துள்ளது. அவற்றை தீர்ப்பதற்கே 10 ஆண்டுகள் ஆகி உள்ளது. சமீபத்தில் தான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதையடுத்து கோர்ட் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது.