பாலாஜி  மோகன் இயக்கத்தில் தனுஷ் – சாய் பல்லவி நடித்த மாரி 2 கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்தப் படம் பாடலுக்காகவும் நன்றாக ஓடியது.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி இந்தப் பாடல் யூ டியூப்பில்  வெளியிடப்பட்டது. இது விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப் போறான் தமிழன் பாடலை முந்தி சாதனை படைத்துள்ளது. ஆளப்போறான் தமிழன் பாடல் 9 கோடியே 10 லட்சம் ரசிகர்களைப் பெற்றது,

தற்போது ரவுடி பேபி பாடல் 9 கோடியே 65 லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளது. இது விரைவில் 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

இதே போல் தி ஹாலிவுட் ரிப்போர்டர் பத்திரிக்கையின் பில் போர்டில் டாப் 5 பாடல்களில் ஒன்றாக ரவுடி போபி பாடல் இடம் பெற்றிருந்தது. பில் போர்டில் இடம் பெறும் முதல் தமிழ் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி தீ மற்றும் தனுஷ் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். உலக அளவில் இந்தப் பாடல் டிரெண்ட் ஆனதால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.