தனுஷ் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து வெற்றி கனியை எட்டாத திரைப்படம் 'மாரி' . பொதுவாக வெற்றி பெற்ற படத்தின் படங்களுக்கு மட்டுமே இரண்டாம் பாகம் எடுக்க ஒற்றுக்கொள்ளும் நடிகர்கள் மத்தியில் தனுஷ் துணிச்சலாக மாரி 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி 'மாரி 2 ' இரண்டாம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்ததை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2018, 3:44 PM IST