Asianet News TamilAsianet News Tamil

MarakkarMovieReview மரைக்காயர் படம் எப்படி இருக்கு ; கலவையான விமரிசனங்களுடன் ட்ரெண்டாகும் மரைக்காயர்!!

MarakkarMovieReview முதல் பாதியை பார்த்த பிறகு ரசிகர்கள் மோகன்லாலின் மாஸ் என்ட்ரி என புகழ்ந்து வருகின்றனர். ஆனால் படம் சற்று போராடப்பதாகவும் சிலர் கமன்ட் செய்துள்ளனர்.

marakkar movie review
Author
Chennai, First Published Dec 2, 2021, 11:55 AM IST

பிரம்மாண்டமாக 100 கோடி செலவில் உருவாகியுள்ள மோகன்லாலின் "மரைக்காயர்"’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

திரு - ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் - கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஐதராபாத்தில் உள்ள ராமோஜீ பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரக்காயர் குவித்திருந்தது. 

marakkar movie review

இரண்டு வருடங்களுக்கு மேலாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக இதன் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் 100 கோடி ரூபாயும் மரக்காயர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது .

பின்னர்  இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை மோகன்லால் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் இந்த முடிவைத் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

இதன் வெளியீட்டு உரிமை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் தமிழ் மொழி பதிப்பை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வங்கியுள்ளார்.

ரூ.100 கோடியில் தயாரான இந்த படத்திற்கு மினிமம் ரூ.105 கோடி வருமானம் கிடைத்தால் போதும் என பத்திரிக்கையார் சந்திப்பின் போது நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இன்று வெளியாகியுள்ள இந்த டபடத்திற்கான முன் பதிவின் மூலம் ரூ.100 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று திரை கண்டுள்ள மரைக்கார் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் பாதியை பார்த்த பிறகு ரசிகர்கள் மோகன்லாலின் மாஸ் என்ட்ரி என புகழ்ந்து வருகின்றனர். ஆனால் படம் சற்று போராடப்பதாகவும் சிலர் கமன்ட் செய்துள்ளனர்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios