அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் 'மரபு' . 

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் 'மரபு' . ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும்.

ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி "மரபு" என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது. இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விக்டர் இமானுவேல் இயக்கம் இந்த அப்படத்தில், நாயகியாக இலக்கியா நடித்துள்ளார். பிரபல நடிகர் ஆனந்த் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மரபு மரபு மாறாமல் வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ...