நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் தீடீர் அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த திட்டத்தை பல்வேறு தலைவர்கள் வரவேற்றாலும், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாகவது. மோடி அனைவரையும் ராப்பிச்சைக்காரனாக மாற்றிவிட்டார் என தெரிவித்தார்.

100 ரூபாய் நோட்டை பிச்சையாக போட்ட காலம் மாறி தற்போது 100 ரூபாய் நோட்டிற்காக அனைவரும் வங்கியின் முன்பு நின்று பிச்சையெடுக்கும் அவல நிலை வந்து விட்டது என்றும், 

மழை பெய்தால் சாயம் போகும் நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டு உள்ளது. இதனை பிச்சைக்காரன் கூட வாங்க மறுப்பான் என்றும், டூப்ளிகேட் நோட்டை போல் புதிய ரூபாய் நோட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் பணக்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற வங்கிமுன் வரிசையில் நிற்கவில்லை. தங்களின் பணத்தை டாலர்களாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளும், ஏழை மக்களும் தான்.

இரவோடு இரவாக மோடி அறிவித்த இந்த திட்டம் தவறானது என்றும், ஏற்கனவே அறிவித்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.