தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைப்பதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்.  

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு, எதிராக  நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை சேர்த்த ஒரு தரப்பினர், தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் போலீஸாருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட விஷால்,’ தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பராகவோ இல்லாத யாரோ சிலர் போட்ட பூட்டைத் திறக்க அனுமதிக்காதது அநியாயம் என்று கூச்சலிட்டார்.

ஆனால் எவ்வளவோ விஷால் போராடியும், போலீசார் விஷாலை பூட்டை உடைக்க அனுமதிக்காமல், தடுத்து விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்தனர். விஷால் கைது செய்வதை எதிர்த்து போலீசாரை ஒருமையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்து சென்று கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தற்போது தமிழ் திரையுலகே பரபரப்பில் உள்ளது. மேலும் அடுத்ததடுத்து ரிலீஸ் ஆக உள்ள படங்கள் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.