சசிகலாவை எதிர்த்து நேற்று இரவு முதல் முறையாக பொங்கி எழுந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவருக்கு ஆதரவாக பலர் தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இதுவரை சசிகலாவை எதிர்க்க முடியாதவர்கள்கூட தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களையும் , ஆதரவையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனை என பலவற்றிலும் உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்து தைரியமாக கேள்வி கேட்டவர்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து சற்றுமுன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு தந்தையை போல கிண்டல்களை எதிர்கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம். அத்தகைய நல்ல உள்ளம் படைத்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.