Mansoor Ali Khan asked if you did not ask Rajmauli. What is that question
பாகுபலி - 2 படத்தின் இயக்குநர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
பாகுபலி2 படம் சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், அந்தப் படம் மகாபாரதம், ராமாயணத்தின் கலவை என்று ஒருபக்கம் விமர்சனம் வந்துக் கொண்டுதான் இருக்கிறத்உ.
இருந்தும், வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசியதாவது:
“பாகுபலி படம் ஒரு சிறந்த சரித்திரப் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சத்யராஜும், ரம்யாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் என்னை அழ வைத்துவிட்டது.
ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ராஜமௌலி மீது எனக்கு சில அதிருப்திகள் இருக்கிறது. அவர் நன்றாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை அப்படம் வசூலித்து வருகிறது.
ஆனால், பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி கூட தமிழ்நாட்டில் எடுக்கப்படவில்லை?
அதேபோல், தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த ஒரு துணை நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் கூட பாகுபலி படத்தில் பயன்படுத்தப்படவில்லை?
அப்படி நடந்திருந்தால், தமிழ் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
இதை ராஜமௌலி செய்யாதது எனக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
