இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முகம் கொண்டு விளங்குபவர்  மனோ பாலா. இவருடைய மகன் ஹரிஷின் திருமணம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தாய்மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மனோபாலா, இதைத்தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, சேது, நண்பன், துப்பாக்கி, காற்றின் மொழி, என 200 க்கும் மேற்பட்ட படங்களில் அணைத்து முன்னனணி நடிகர்களுடனும்  காமெடி வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும் இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் இவர்,  பல முன்னணி  இயக்குனர்களுடன் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் இவருடைய மகன் ஹரிஷுக்கும் பிரியா என்பவருக்கும் இன்று சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் காலை 7 மணி அளவில் திருமணம் நடைபெற்றது.  இவர்களுடைய திருமணத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.