Mannaarkudi Video Song : தனுஷ் நடித்துள்ள "Atrangi Re" படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணத்திலிருந்து 'மன்னார்குடி' என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான தனுஷ் தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார். 2013- ல் வெளியான Raanjhanaa வை தொடர்ந்து தற்போது "Atrangi Re" படத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அத்ரங்கி ரே'. கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், மீண்டும் அதிகமான கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகாவில்லை. 

 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. disney+ hotstar ஓடிடி தளம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நேரடியாக இந்த ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி "Atrangi Re" வெளியாகும் என பாடக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் இரண்டு சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவது சிங்கிளாக 'Garda' என்னும் பாடல் வெளியாகியுள்ளது. கலர்புல் பின்னனியில் உருவான இந்த பாடலுக்கான மாஸ் இசையை ஏஆர் ரகுமான் வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணத்திலிருந்து 'மன்னார்குடி' என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

YouTube video player