Reply for Ilayaraja : Manjummel Boys படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்று, இளையராக சார்பாக அனுப்பப்பட்டது. அதில் தன்னுடைய பாடலை, தன்னிடம் அனுமதி பெறாமல் அப்படத்தில் பயன்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்.

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் Manjummel Boys. குறிப்பாக தமிழ் மொழியில் இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறியது .உலகநாயகன் கமல்ஹாசன் முதல், பிரபல நடிகர் தனுஷ் வரை பல முன்னணி நடிகர், நடிகைகள் Manjummel Boys பட குழுவினரை நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்தது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் தொடக்கத்திலும், கிளைமாக்ஸ் பகுதிகளும் ஒலிக்கும் கமலின் குணா படத்தில் ஒலித்த "கண்மணி அன்போடு காதலன்" என்கின்ற பாடல் அந்த படத்தின் உயிர்நாடியாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல. ஆகையால் தன்னுடைய பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியது தவறு என்றும், உடனடியாக படத்தில் இருந்து தனது பாடலை நீக்க வேண்டும், அல்லது உரிய இழப்பீட்டை தனக்கு தர வேண்டும் என்று கூறி Manjummel Boys பட குழுவினருக்கு இசைஞானி நோட்டீஸ் அனுப்பினார். 

"என்ன நம்பவச்சு ஏமாத்திட்டாங்க".. 15 லட்சம் பணமும் போச்சு.. ஏமாற்றப்பட்டாரா நடிகை கிரண்? - நடந்தது என்ன?

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது Manjummel பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி இளையராஜாவின் இந்த நோட்டீஸிற்கு முறையான பதிலை தெரிவித்துள்ளார். அதன்படி எங்கள் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்கான காப்புரிமை உள்ள இரு நிறுவனங்களிடம் உரிய ஒப்புதல் வாங்கி விட்டதாகவும், தங்கள் தரப்பில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

ஏற்கனவே இரு நிறுவனங்களிடம் அந்த திரைப்படத்திற்கான பாடல்களுடைய காப்புரிமை இருக்கும் நிலையில், அந்த பாடலுக்கு தான் தான் முதல் உரிமையாளர் என்று கூறி இளையராஜா இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி 3 மாதங்கள் ஆகிவிட நிலையில் இந்த பிரச்சனை ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முதல் படத்திற்கு சம்பளமே வாங்கல.. 400 படங்களில் ஒரு படம் கூட 100 கோடி வசூல் இல்ல.. ஆனா இன்றும் சூப்பர்ஸ்டார்..