மலையாள திரையுலகில் 40 வயதை கடந்தும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல நடிகை மஞ்சு வாரியார். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகை மஞ்சுவாரியர் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் மஞ்சுவாரியர் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துள்ளார் அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவரை படக்குழுவினர் உடனடியாக மருத்துவமைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.