manjima mohan talk about virginity

கன்னித்தன்மை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசியவருக்கு நடிகை மஞ்சிமா மோகன் காரஞ்சாரமாக பதில் கொடுத்துள்ளார்.

பாலியல் வன்முறை:

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன், நடிகை அமலா பால் நடனப் பயிற்சிக்கு சென்ற இடத்தில் தொழிலதிபர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானார். அதே போல் 'ரேணி குண்டா', 'கொடிவீரன்' ஆகிய படங்களில் நடித்த நடிகை சனுஷாவவும் ரயிலில் சென்ற பொது பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இவர்கள் இருவருமே இது குறித்து தைரியமாக வெளியில் கூறினர். இவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மீது போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமா மோகன் கருத்து:

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ள நடிகை மஞ்சிமா மோகன், முன்பை விட பெண்கள் இப்போது பாதுகாப்பாக உள்ளதாக நான் என் சகோதரரிடம் தெரிவித்தேன். ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்த்தல் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே போதாது என்றும், பெண்களை ஆண்கள் போதப்பொருளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் எனறும் கூறியிருந்தார்.

Scroll to load tweet…

கன்னித்தன்மைப் பற்றி பேசிய நெட்டிசன்:

மஞ்சிமா மோகன் போட்ட இந்த ட்விட்டிற்கு பதில் கொடுத்திருந்த நெட்டிசன் ஒருவர். உங்களுக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன் என்று கூறி... முடிந்த வரை சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் தற்போது கன்னித்தன்மையை காப்பது மிகவும் கடினம் என்று கமெண்ட் செய்திருந்தார்.

பளீர் பதில்:

இந்த நெட்டிசனின் கமெண்ட்க்கு பதில் கொடுத்த மஞ்சிமா... இதற்கு திருமணம் மட்டும் தான் தீர்வா...! இது கன்னித்தன்மையை[ப் பற்றிய விஷயம் இல்லை சுயமரியாதையைப் பற்றிய விஷயம் என காரஞ்சாரமாக இறங்கி பதில் கொடுத்துள்ளார்.

Scroll to load tweet…

பாராட்டும் ரசிகர்கள்:

மஞ்சிமா மோகனின் இந்த பேச்சு ரசிகர்கள் பலரை கவர்துள்ளது எனவே பலர் இவரை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.