இந்திய சினிமாவில் பல நடிகைகளுக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளது. அது அவர்களை ரிலாக்ஸ் செய்கிறது என நம்புகிறார்கள்.

இதில் ஒரு சில கதாநாயகிகள் எல்லாம் கணக்கே இல்லாமல் ஊதி தள்ளுவார்களாம். இப்படி அதிகம் சிகரெட் குடிக்கும் நாயகிகளில் பட்டியல் ஏராளம்.

அப்படித்தான் பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மனீஷா கொய்ராலா .

அவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 சிகரெட் குடிப்பாராம், இதனால், ஒரு கட்டத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, யாரும் கண்டுக்கொள்ளாமல் மிகவும் பரிதாப நிலையை அடைந்துள்ளார்.

மேலும் தான் சிகரெட்டை தொட்டதால் தான் தன்னுடைய வாழ்க்கை கெட்டது என்றும் தற்போது அதிலிருந்து மீண்ட அவர் இனி யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.

அதனால் என்ன விளைவு என்பதை எல்லோருக்கும் எடுத்துக்கூற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறாராம்.

டெல்லி இலக்கிய மாநாட்டின் போது கேன்சர் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.