நவம்பர் முதல்வாரத்தில் சென்னையைக் காலி செய்துவிட்டு தாய்லாந்து கிளம்புகிறார் இயக்குநர் மணிரத்னம் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? அவரது ‘பொன்னியின் செல்வன்’படக்குழுவினரும் துவக்கத்தில் இதே அதிர்ச்சிக்கு ஆளாகி தற்போதுதான் சகஜநிலைக்குத் திரும்பியுள்ளனர். யெஸ் பொன்னியின் செல்வன் மொத்தப்படப்பிடிப்பும் தமிழ் லேண்டுக்குப் பதில் தாய்லாந்திலேயே நடைபெற உள்ளது.

இயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவுள்ளார் என்பது ஒரு வருடத்துப் பழைய செய்தி.இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், சத்யராஜ், ஜெயராம் உடபட தென்னிந்திய சினிமாவின் பாதி நட்சத்திரக்கூட்டம் நடிக்கவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத மத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில் மொத்தப் படப்பிடிப்பையும் தாய்லாந்து நாட்டிலேயே நடத்திவிடும் முடிவில் இருக்கிறாராம் மணிரத்னம். தமிழகத்தில் எத்தனயோ லொகேஷன்களைப் பார்த்த அவருக்கு தாய்லாந்தில் காட்சி அளித்த அடர்ந்த காடுகள் அளவுக்கு எதுவும் திருதி அளிக்கவில்லை. இன்னொரு பக்கம் பழங்காலத்தில் காணப்பட்ட சைஸில் யானைகளையும் குதிரைகளையும் கூட அங்கேயே அதிகம் காணமுடிந்ததாம். படப்பிடிப்பு அனுமதி பெறுவது எளிது. கட்டணம் குறைவு போன்றவை அடிஷனல் காரணங்கள்.

இவையெல்லாவற்றையும் விட படத்தில் பெரிய நட்சத்திரப்பட்டாளம் இருப்பதால் அவர்களை லம்பாக வெளிநாட்டுக்குக் கடத்திக்கொண்டுபோய்விட்டால் கால்ஷீட் பிரச்சினை இருக்காது என்பது மணி ரத்தினக்கணக்கு.