அவரது ஸ்டைலுக்கு மிக முற்றிலும் எதிராக இருக்கப்போகிறது பொன்னியின் செல்வன் படம். பத்தாம் நூற்றாண்டை கதைகளமாக கொண்ட இந்தப் படத்துக்கு ஒவ்வொரு இன்ச்சிலும் செட் செட் செட் அமைத்தே ஆக வேண்டும். வனம் போன்ற இயற்கையான அவுட்டோர் விஷயங்களைத் தவிர மற்றபடி செட்டிங்ஸ் இல்லாமல் இந்தப் படத்தை படமாக்குவது சாத்தியமே இல்லை. 

தோட்டாதரணி, சாபுசிரில், முத்துராஜ் போன்ற ஆளுமையான ஆர்ட் டைரக்டர்களில் ஒருவரை இந்தப் படத்துக்காக முதல் ஸீனிலிருந்து இறுதி ஸீன் வரை மணிரத்னம் உடன் வைத்தே ஆக வேண்டும். ஆனால், திரைக்கதையை முடித்துவிட்டு, இந்த இந்த கேரக்டர்களுக்கு இவர் இவர் என்று நடிகர் படையையும் ஃபிக்ஸ் பண்ணிவிட்ட மணிரத்னம், இன்னமும் ஆர்ட் டைரக்டரை ஃபிக்ஸ் பண்ணவில்லையாம். 

ஆர்ட் டைரக்ஷனுக்கு பாகுபலி போன்று மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் இந்த படத்தின் கலை இயக்குநர் யார்?  இவர்களில் யாருடைய கை  கலை இயக்கத்தில் கை வைக்கப்போகிறது? என்பதே கோலிவுட்டை இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பெரிய கேள்வி.
ஆனால் மணி இன்னமும் மெளனம் காப்பதுதான் பெரிய புதிரே. ஒரு வேளை இருளும், சிறு ஒளியுமாகவே படத்தை நகர்த்தும் முடிவில், பல குத்துவிளக்குகளும், சில திரைச்சீலைகளுமே போதுமென நினைத்துவிட்டாரோ?