ஷங்கர்-ஏ.ஆர். ரகுமான் கூட்டணி முறிந்திருக்கும் நிலையில் மணிரத்னமும் இசைப்புயலுடனான தனது பந்தத்தை முறித்துக்கொண்டதாக நம்பமுடியாத தகவல்கள் நடமாடுகின்றன.

ஷங்கராவது தனது சொந்தத்தயாரிப்புகளுக்கும் ‘அந்நியன்’ படத்துக்கும் மற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி ரகுமானுடன் இருந்தார். ஆனால் ‘ரோஜா’வில் கைகோர்த்த மணிரத்னம் ரஹ்மானை விட்டு வெளியே போனதேயில்லை. தவிர அவருடன் மிக அந்நியோன்மாகவும் இருந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு இரு சிறு பட்ஜெட் படங்களை தனது நிறுவனத்தில் புதுமுகங்களை வைத்துத்தொடங்கிய மணிரத்னம் அந்த இருபடங்களுக்குமே ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை கமிட் செய்தார்.

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அடுத்து ‘பொன்னியின் செல்வன்’ இயக்குவதற்கு முன்பு, குறுகிய காலத்தில் சிம்பு அல்லது கார்த்தியை வைத்து படம் இயக்கமுடிவு செய்திருக்கும் மணிரத்னம் அப்படத்துக்கும் ரஹ்மானை அழைக்காமல் கோவிந்தையே இசையமைப்பாளராக்க முடிவு செய்திருக்கிறாராம். ஒருவேளை இது பொன்னியின் செல்வனிலும் தொடர்ந்தால் இந்தக் கூட்டணியும் கோவிந்தா என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துவந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு இது பெரும்பின்னடைவுதான்.