manirathnam give the more important for vijay sethupathy
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் பற்றி
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் மணிரத்னம் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

நடிகர்கள் விவரம்:
அதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த, திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு முதலில் விஜய் சேதுபதிக்கு, முக்கியமான சிறிய கதாபாத்திரத்துக்குதான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் மணிரத்னம் நீட்டித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இசை:
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். மணிரத்னத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கவிருப்பதாக சிம்பு சமீபத்தில் அறிவித்திருந்தார்.

விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம்:
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி தற்போது சூப்பர் டீலக்ஸ் , 96, சீதக்காதி, ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, அவரின் ஒவ்வொரு படத்திலும் வெளிக்காட்டும் அழுத்தமான நடிப்புக்காகவே மணிரத்னம் அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
