manimegalai share the photo
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, தன்னுடைய காதலனைக் கைபிடிக்க பெற்றோர் மற்றும் சகோதரரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து மணிமேகலை மற்றும் அவருடைய காதல் கணவர் ஹுசைன் இருவரும் ஜோடியாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தனர்.
வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் மீறி திருமணம் செய்துகொண்டு, தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர், தன்னுடைய வாழ்க்கை குறித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு நீ என கணவர் பற்றிக் கூறியுள்ளார் மணிமேகலை. மேலும் மணிமேகலை தன்னுடைய கணவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார் மணிமேகலை.
