விஜய் சேதுபதி எப்போதும் மக்கள் விரும்பும் படியான தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

இவர் நடித்து வெளிவந்துள்ள விக்ரம் வேதா திரைப்படம் அனைத்து தர ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதியின் கையில் பல படங்களை வைத்துள்ளார், அவை அடுத்தடுத்து வெளிவர தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் மணிரத்னம் தன் அடுத்தப் படத்திற்கு விஜய் சேதுபதியை அனுகியுள்ளார்.  விஜய் சேதுபதியும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் கால்ஷிட் தேதியை மாற்றி மணிரத்னம் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிகின்றன. மேலும், விரைவில் இதுகுறித்து தகவல் வெளிவரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.