பாடகி சின்மயி பொதுவாக பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் நடைபெறும் பலியால் தொந்தரவுகளை எதிர்க்கும் விதமாக மீ டூ அமைப்பை தமிழகத்திலும் மிகவும் பிரபலமாக்கினார். இதில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் சிக்கினர். குறிப்பாக கவிஞர் வைரமுத்து தன்னிடமே அத்து மீறி நடந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்த நிலையில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் ஒரு நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்து பார்த்தபடி  வெக்கமின்றி பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்து கொண்டிருந்ததாகவும். இதை ஒரு பெண் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாங்க்ராமில் பதிவிட்டுள்ளதாக கூறி சின்மயி அதனை ஷேர் செய்துள்ளார். 

இது குறித்து அந்த பெண் வெளியிட்டுள்ள தகவலில் நவம்பர் 29 தேதி, சரியாக மதியம் 1 : 30 மணியளவில் நான் எப்போதும் அமரும் ஜன்னல் பக்கத்தில் ஹெட் செட் போட்டு கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டு பயணித்தேன்.

அப்போது என் எதிரே அமர்ந்திருந்தவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை சரியாக நான் பார்க்க வில்லை. அவன் என் எதிரே அமைத்துள்ள ஜன்னல் சீட் பக்கத்தில் அமர்ந்த படி முன்னாடி சீட்டில் அமர்த்துள்ள பெண்களை பார்த்த படி  மிகவும் அசிங்கமாக விதமாக அமர்ந்து கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டான். இதை பார்த்து ஒரு நிமிடம் அதிந்து விட்டேன். பின் பொறுமையாக சில புகைப்படங்களை ஆதாரமாக எடுத்து வைத்து கொண்டு... இது குறித்து டிக்கெட் காலெக்டரிடம் கூறி சத்தம் போட்டதாகவும் அவரின் பதிவில் கூறியுள்ளார்.