உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. 

சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக நடிகையும், பிரபல ஆர்.ஜேவும்மான மமதி சாரி வெளியேற்றப்பட்டார். 

இவர்தான் நடிகை மும்தாஜ்க்கு பிக்பாஸ் வீட்டில் மிகவும் ஆறுதலாக இருந்தவர். ஆனால் இவரின் செய்கைகள் சற்று போலித்தனமாக இருந்ததாலும், இவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாகவே இருந்ததாலும் ரசிகர்களின் ஆதரவு பெருவாரியாக கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள்  இவரையும் மும்தாஜையும் நடத்திய விதத்தை பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது, "எஜமான் - வேலைக்காரன்"  டாஸ்க் தங்களுக்கு கொடுக்கப்பட்டபோது ஆண்கள் சற்று எல்லை மீறி நடந்து கொண்டார்கள். 

குறிப்பாக நடிகர் சென்ராயன்... அவருடைய அழுக்கு ஜட்டியை துவைக்க சொல்லி மும்தாஜிடம் கொடுத்தார், மற்ற ஆண்களும் தன்னிடம் வேலைவாங்க வேண்டும் என மோசமாக எல்லை மீறி நடந்து கொண்டனர்" என கூறியுள்ளார். முதல் போட்டியாளரே இப்படி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.