பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சியில் முதல் முறையாக போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. 

பெண் போட்டியாளர்கள் அனைவரும் இன்று சேலை கட்டுக் கண்டிக்கொண்டு உள்ள படி இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நடிகை மும்தாஜ், கையில் விசிறியை வைத்துக்கொண்டு (this is too much) என ஆங்கிலத்தில் கூற அதற்கு மமதி முறை தவறு என்று தூய தமிழில் கூறுகிறார். 

பின் மும்தாஜ் சென்ராயனுக்கு உணவு ஊட்டி விடும் காட்சி காண்பிக்கப்படுகிறது. 

இதைதொடர்ந்து மும்தாஜ் இருக்கும் இடத்திற்கு வரும் டானியல் இதனை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் இது வெறும் டாஸ்க் என கூறுகிறார்.

இதற்கு மும்தாஜ், இது எவ்வளவு பெரிய லச்சுரி பட்ஜெட் டாஸ்க்காக இருந்தாலும் தனக்கு பிடிக்க வில்லை என்றால் விளையாட முடியாது என கூறுகிறார். மேலும் தங்களுடைய பெயர் எலிமினேஷன் போனாலும் பரவாயில்லை என கூறுகிறார். இதனை மமதியும் கூறுகிறார்.

இதைதொடர்ந்து டானியல் மஹத், மற்றும் ஷாரிகிடம் சினிமா என்றால் செய்வேன், இதில் பண்ண முடியாது என்பது போல் இரண்டு பேரும் கூருவதாக தெரிவிக்கிறார்.

இதை கேட்டதும் மஹத் 'இந்த மமதி சும்மா சும்மா... மும்தாஜை ஏற்றி விடுகிறார் என்றும் வெளியில் போக சொல்லி விடுங்கள் என்றும் கூறுகிறார். 

டாஸ்க் செய்ய மறுப்பதால் என்ன நடக்க போகிறது பிக்போஸ் வீட்டில், இருவரும் வெளியேறுவார்களா ..? பொறுத்திருந்து பார்ப்போம்.