இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது. 167 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காருக்குள் தோழிகளுடன் சேர்ந்து செம்ம ஆட்டம்... தல பாட்டுக்கு நடிகை பார்வதி போட்ட ஸ்டெப்பை நீங்களே பாருங்க...!

பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாமல் சுற்றி வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறது. காட்டுத்தீ போல் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லையே என்று மக்கள் அனைவரும் புலம்பி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவில் இருந்த மீண்ட நோயாளிகள் குறித்த சூப்பர் தகவல்களும் வெளியாகி நமக்கு நம்பிக்கையூட்டி வருகிறது. 

மலையாளத்தில் “கேரளா கஃபே”, “பாலிடெக்னிக்” போன்ற படங்களை இயக்கியவர் பத்மகுமார். மம்மூட்டி நடிப்பில் இவர் இயக்கிய “மாமாங்கம்” திரைப்படம் வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகன் அதன் பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க:  “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், “எனது மகன் ஆகாஷ் மற்றும் அவனுடன் பணிபுரியும் எல்தோ மேத்தியூ ஆகியோர் கலமசேரி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நோய்க்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த ஒட்டுமொத்த அணிக்கும் கேப்டனாக இருந்து வழிநடத்தும் எங்கள் முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பதிவு மட்டுமல்ல, எனது மாநிலத்தின் பெருமையை தெரிவிக்கும் பதிவு. உலக மக்கள் மீது கவனம் செலுத்துவதில் எங்கள் அரசு நம்பர் 1” என்று பெருமையாக பதிவிட்டுள்ளார்.