சமீப காலமாக பல நடிகைகளின் ஃபேவரட் இடமாக மாறியுள்ளது மாலத்தீவு. நடிகை காஜல் அகர்வால், ஹனி மூன் கொண்டாட கணவருடன் மாலத்தீவிற்கு சென்று வந்தது முதல் அடுத்தடுத்து பல நடிகைகள் அங்கு சென்று, குதூகலமாக பொழுதை கழித்து விட்டு வந்தனர். இந்நிலையில் நடிகைகள் சந்தோஷத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக அந்த ஊர் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுற்றுலா என்பதும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று, எனவே வருடத்தில் ஒரு முறையாவது என்ன வேலைகள் இருந்தாலும், விடுமுறை எடுத்து கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆசை படுபவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் மிகவும் விரும்பி சென்ற இடம் என்றால் அது மாலத்தீவு தான். 

காஜலில் துவங்கி, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஜான்வி கபூர், ஷிவானி, டிடி என... மாலத்தீவிற்கு சென்றவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி பலர் இந்த இடத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம், இந்த நாடு அரசு, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க போட்ட அதிரடி திட்டம் தான். இன்ஸ்டாகிராம், மற்றும் மற்ற சமூக வலைதள பக்கத்தில் அதிகப்படியான ஃபாலோவர்ஸ் இருந்தால், அவர்களுக்கு தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல், விமான டிக்கெட், சாப்பாடு என அனைத்தையும் பிரீயாக கொடுக்கின்றனர்.

இதற்க்கு பதிலாக நடிகைகள், மாலத்தீவில் அழகை...  புகைப்படமாக அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்பது மட்டுமே. இந்த சூப்பர் ஆப்பரை மிஸ் பண்ண விரும்பாத பல நடிகைகள் தொடர்ந்து மாலதீவுக்கு சென்று வந்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாலத்தீவு அரசு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் இருந்து யாரும் மாலத்தீவிற்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, மாலத்தீவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நடிகைகளை சோகமடைய செய்துள்ளது. நேற்று முதல் இதனை அமல் படுத்தியுள்ள அந்த அரசு, கொரோனாவின் இரண்டாவது அலை சற்று தணிந்த பிறகே மீண்டும், அதிக அளவு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.