நடிகர் மம்மூட்டியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
நடிகர் மம்முட்டியின் சகோதரி ஆமினா என்கிற நசீமா உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று காலமானார். இவரின் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழம்பெரும் நடிகர் மம்முட்டியின் தங்கை அமீனா இன்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் குடும்பத்தைச் சேர்ந்த, மறைந்த பி.எம்.சலீமின் மனைவியாவார்.
இவருக்கு மம்முட்டியைத் தவிர, உடன்பிறந்தவர்கள் இப்ராகிம்குட்டி, ஜக்காரியா, சவுதா மற்றும் ஷஃபீனா ஆகியோர் உள்ளனர். மேலும் இவருக்கு ஜூலி, ஜூபி மற்றும் ஜிதின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது உடல் நாளை செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடும்ப முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் மம்மூட்டியின் சகோதரி அமீனாவின் மறைவுக்கு மலையாள திரையுலகமும், மம்மூட்டியின் ரசிகர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலர் சமூக ஊடக தளங்களில் தங்கையை இழந்த வாடும் மம்மூட்டி மற்றும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.