Asianet News TamilAsianet News Tamil

"சிரிப்பிலே ஸ்கோர் பன்றாரே.. மிரட்டலாக வெளியானது பிரமயுகம் டீசர் - மாறுபட்ட வேடத்தில் வருகின்றார் மம்மூட்டி!

Mammootty Bramayugam Teaser : பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அவர்களின் பிறமயுகம் திரைப்படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது. திகில் நிறைந்த ஒரு பீரியட் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது.

Malayalam super star mammootty bramayugam teaser out now ans
Author
First Published Jan 11, 2024, 5:33 PM IST

இந்திய திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக பயணித்து வரும் நடிகர்களின் என்னைகை மிகக்குறைவு. அந்த வகையில் பிரபலமான மலையாள திரை உலகில் கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கிய, இந்த 2024ம் ஆண்டிலும் ரசிகர்களை வேற லெவலில் தன்னை ரசிக்கவைக்கும் ஒரு நடிகர் தான் மம்மூட்டி. 

அன்று தொடங்கி இன்று வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார் அவர். கடந்த 1983 ஆம் ஆண்டு மட்டும், ஒரே வருடத்தில் மம்மூட்டியின் நடிப்பில் 33 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்த வேகம் இப்பொது வரை அவருக்கு குறையவில்லை. 

பெமி 9 சக்ஸஸ் மீட் சக்ஸஸ்.. எல்லாருக்கும் நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் - வெற்றி விழா வைரல் பிக்ஸ் இதோ!

தான் திரையுலகில் அறிமுகமான வெகு சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய நடிகராக உருவெடுத்த மம்மூட்டி அவர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதே மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார் அவர்.

தனது கலை உலக பயணத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூட்டியின் நடிப்பில் இறுதியாக வெளியான "காதல் தி கோர்" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் அவருடைய நாயகியாக பிரபல நடிகை ஜோதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓரின சேர்க்கையாளரின் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்தது அப்படத்தை பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையல்ல.

இந்நிலையில் ராகுல் சதாசிவன் என்பவருடைய இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் மம்மூட்டி. அந்த படத்தின் first look போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளியான நிலையில், இன்று ஜனவரி 11ம் தேதி அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் மம்மூட்டி நடித்துள்ளார் என்றே கூறலாம். அவரது ரசிகர்கள் மத்தியில் அந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா!

Follow Us:
Download App:
  • android
  • ios