கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது மூன்றாம் கட்டமாக  மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும்  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்பதால் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு தளங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அப்படி தியேட்டர்கள் மூடும் வருவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் கோழிப்போரு. இந்தப் படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜனார்தனன் ஆகியோர் இயக்கினர். 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் ஓவர் கிளு கிளுப்பு... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கிக்கேற்றிய கவர்ச்சி நடிகை...!

இந்த படத்தில் நவஜித் நாராயணன், பாபி வல்சன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற போதும்,  கொரோனா பிரச்சனை காரணமாக மற்ற படங்கள் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டது போன்றே அந்த திரைப்படமும் எடுக்கப்பட்டது. லாக்டவுனுக்கு பிறகு படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், மலையாள உலகையே சோக செய்தி ஒன்று புரட்டி போட்டுள்ளது. 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

இந்நிலையில் இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ஜிபித் ஜார்ஜ் நேற்று காலை நெஞ்சுவலியால் மரணமடைந்தார். கொச்சியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஜிபித்திற்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாத அவர் சாதாரண வலி என நினைத்து வீட்டிலேயே தங்கிவிட்டார். பின்னர் மாலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிபிஜித், ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

30 வயதே ஆன இளம் இயக்குநர் ஜிபித் ஜார்ஜ் மாரடைப்பால் வீட்டிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் கேரள திரைப்பிரபலங்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.