Malayalam actress post her sky diving picture on social network
அமரகாவியம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மியா ஜார்ஜ். மலையாள திரையுலகை சேர்ந்த இவர் எக்கச்சக்கமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கோடை விடுமுறைக்காக திரைத்துறை பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தருணம் இது. மியா ஜார்ஜும் இந்த கோடை விடுமுறையை கழிக்க, தன் குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது அவர் ஸ்கை டைவிங் செய்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் மியா ஜார்ஜ்.
.jpg)
இது போல ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவாம் .இப்போது தான் அது நிறைவேறியதாம். ஸ்கை டைவிங் செய்வதற்கு நிஜமாகவே கொஞ்சம் தைரியம் வேணும். சாதுவான இந்த மியா பொண்ணுக்கு இவ்வளவு தைரியமா? என இந்த ஸ்கை டைவிங் புகைப்படத்தைப் பார்த்து அவரின் நட்பு வட்டமே வியந்திருக்கிறது.
