கொரோனா பிரச்சனையால் திரையுலகம் மொத்தமாக முடங்கியுள்ளது. தமிழகத்தில் சீரியல் மற்றும் டி.வி.நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கான அனுமதி எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. ஆனால் சினிமா தொடர்பான போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மட்டும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சினிமா ஷூட்டிங்கை நடந்த ஆந்திரா, தெலங்கானா அரசுகள் அனுமதி அளித்துவிட்டன. 

 

ஆனால் தீயாய் பரவும் கொரோனா பீதியால் ஆகஸ்ட் மாதம் வரை யாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர், நடிகைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அங்கும் வரும் ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டாலும்,  அதற்கான ஆயத்த வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. 

 

இதையும் படிங்க: காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

கடனை வாங்கி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். அதனால் டாப் ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் முதல் அனைவரும் தங்களது சம்பளத்தை சற்று குறைத்துக்கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கோலிவுட்டில் நீண்ட நாட்களாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொண்டு சிலர் மட்டுமே தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் சம்பள குறைப்பு குறித்து வாய் திறந்ததாக தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இதனிடையே தங்களது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள மலையாள நடிகர்கள் முன்வந்துள்ளதாக வெளியான செய்தி கோலிவுட் தயாரிப்பாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கதைக்களம் மற்றும் காட்சி அமைப்பால் மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் கூட சக்கைப்போடுகின்றன. பல விஷயங்களில் சினிமாத்துறைக்கு முன்னுதாரணமாக விளக்கும் கேரள திரையுலகம், தற்போது சம்பள குறைப்பு விஷயத்திலும் சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. 

 

இதையும் படிங்க: யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

கொரோனா பேரிடரில் இருந்து மலையாள சினிமாவை மீட்க முடிவெடுத்த நடிகர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் கொச்சியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு அதன் முடிவில் ஊதியம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மலையாள தயாரிப்பாளர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டியர் கோலிவுட் நோட் திஸ் பாயிண்ட்...!