மலையாள முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட  வழக்கில் கடந்த ஜூலை மாதம், கேரள போலீசாரால் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக திலீப் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் இரண்டு முறை ஜாமினில் வெளிவர முயற்சி மேற்கொண்டும், நீதிமன்றம் இவருடைய மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த  நடிகையின் பெயரை தன் முகநூல் பதிவில் நடிகர் அஜூ வர்கீஸ் குறிப்பிட்டு ட்வீட் போட்டிருந்தார் இதன் காரணமாலை இவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது IPC பிரிவு 228 (A) வின்படி குற்றமாகும்.

அஜூ வர்கீஸ் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டாலும், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.