தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட்டின் பிசியான நடிகரான இவர் விக்ரம் வேதா  படத்தில் நடித்த வில்லன் கேரக்டர் ஒர்க் அவுட் ஆனதால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். விஜய் சேதுபதிக்கு தமிழில் உள்ள ரசிகர்கள் பட்டாளத்தை பயன்படுத்திக் கொள்ள கணக்கு போட்ட தெலுங்கு தயாரிப்பாளர்களும், டோலிவுட் ஹீரோக்களை விட அதிக சம்பளம் கொடுத்து விஜய் சேதுபதியை வில்லனாக ஒப்பந்தம் செய்தனர். 

கோலிவுட்டின் முன்னணி நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி, தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில், முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். விஜய் - விஜய் சேதுபதி காம்பினேஷனை முதன் முறையாக திரையில் காண ரசிகர்கள் மரண வெயிட்டிங். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

சரி இத்தோடு வில்லத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு ஹீரோவாக கலக்குவார் என்று பார்த்தால் தல அஜித்திற்கு வில்லனாக நடிக்க ஆசை என விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் போதாது என்று கமல் ஹாசன் நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை அறிவித்திருந்தார். அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட த்ரில்லர் கதையான இதை கமல் ஹாசன் இயக்கி நடிக்கவிருந்தார். இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாகவும், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பட வேலையில் கமல் ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார். 

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எல்லை மீறும் ஜூலி... குட்டை உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க...!

தேவர் மகன் 2-ஆக உருவாக உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் கமல் ஹாசன் மெயின் ரோலில் நடிக்க உள்ளார். நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், அவர் தான் கமல் ஹாசனுக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில்  “விஸ்வரூபம்” முதல், இரண்டாம் பாகம் மற்றும்  “உத்தம வில்லன்” ஆகிய படங்களில் நடித்த ஆன்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாயகன் கமல் ஹாசனுக்கு வில்லனாக களம் இறங்க போகும் விஜய் சேதுபதியின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.