நடிகை நந்தினி தற்போது, கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவருடைய வளையக்காப்பு நிகழ்வு எளிமையாக நடந்து முடித்துள்ளது. இதனை ரசிகர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார், நடிகை நந்தினி. 

நடிகை நந்தினி தற்போது, கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவருடைய வளையக்காப்பு நிகழ்வு எளிமையாக நடந்து முடித்துள்ளது. இதனை ரசிகர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார், நடிகை நந்தினி.

'வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது.

அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினி, தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று மைனா நந்தினிக்கு எளிமையான முறையில், வளையக்காப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த வீடியோக்கள் மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதில் விரையில் குட்டி யோகி அல்லது தன்னை போல் குட்டி நந்தினியை எதிர் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் யோகேஷ்வரன் - மைனா நந்தினி தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

View post on Instagram