'வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி.  இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.

இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில்  மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது.

தற்போது 'அரண்மனை கிளி' என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நந்தினி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. மேலும் இது குறித்து அவர் கொடுத்த பேட்டி ஒன்றிலும் திருமணத்தை உறுதி செய்வது போல் பேசியிருந்தார். 

இதை தொடர்ந்து அவரிடமே தொடர்பு கொண்டு பேசியதற்கு, இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக வரும் தகவல் உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார். மேலும் இவருடைய காதலர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விரைவில் அவர் யார் என்பதை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் சில சமயங்களில் அடுத்த கட்டத்தை நோக்கி சொல்லவேண்டியது அவசியம் என்கிற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அதே போல், மைனாவின் காதலர் என்று வெளியாகியுள்ள சீரியல் நடிகர்தான் அவருடைய காதலர் என்று கூறப்படுவதையும் அவர் மறுக்கவில்லை. எனவே விரைவில், மைனாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.