இதுக்கெல்லாம் அஞ்சுற ஆளாடா தளபதி.? மகேஷ்பாபுவை தெறிக்க விடும் விஜய்..!
பீஸ்ட் முடிந்த பின் நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கும் விஜய்யை ட்ரோல் செய்து ஆந்திராவில் வீடியோக்கள் பட்டையை கிளப்புகின்றன
பீஸ்ட் முடிந்த பின் நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கும் விஜய்யை ட்ரோல் செய்து ஆந்திராவில் வீடியோக்கள் பட்டையை கிளப்புகின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்கள் அஜித்தின் டீமா? என்று தளபதி ரசிகர்கள் டவுட் பண்ணுகிறார்கள் என்று நாம் எழுதியிருந்தோம். இந்நிலையில், நாளுக்கு நாள் விஜய்யை ட்ரோல் பண்ணும் தெலுங்கு வீடியோக்கள் அதிகரித்துக் கொண்டே போனது. இதனால், தன்னை வைத்து நேரடி தெலுங்கு படம் தயாரிக்க இருக்கும் தயாரிப்பு டீமிடமே இதை சொல்லி, இதன் பின்னணியில் யார்? என கண்டறிந்து சொல்ல சொன்னது விஜய் தரப்பு.
அவர்களும் களமிறங்கி, அலசியதில் அதிர்ந்து போயுள்ளனர். காரணம், அதை செய்வது தெலுங்கு சினிமாவில் ‘ப்ரின்ஸ்’ என்றழைக்கப்படும் மகேஷ்பாபு!வின் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வேலைதானாம்.
இதன் காரணம்? என்ன என்று விசாரித்தபோது. கிடைத்த தகவல்கள் “இங்கே விஜய் போல் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு பல லட்சம் ரசிகர்கள். விஜய் எப்படி தன் உருவத்தை மாற்றிக் கொண்டு, புதுப்புது கெட்-அப்களிலெல்லாம் நடிக்காமல் சிம்பிளான லுக்கிலேயே சதம் அடிக்கிறாரோ அதேதான் மகேஷ்பாபுவும் அங்கே செய்வார்.
ஆனால் அதேவேளையில் மகேஷ்பாபுவின் ஹிட் படங்கள் சிலவற்றை விஜய்க்காக தமிழ் ரீமேக் செய்து மரணமாஸ் ஹிட் அடித்தது. இதன் பின் மகேஷின் ரசிகர்கள் ‘எங்க ஆளை வெச்சுதான் விஜய் தமிழ்ல ஜெயிக்கிறார். பிரின்ஸ் கொடுத்த வெற்றியை உடாலக்கடி பண்ணினால்தான் உங்க தளபதிக்கு வெற்றி’ என்று சீண்டினர். இதற்கு விஜய் ரசிகர்கள், ரீமேக் இல்லாமல் ஃப்ரெஷ் கதைகள் மூலம் விஜய் கொடுத்த ஹிட்களை பட்டியலிட்டு, மகேஷ்பாபுவை கிழித்தெடுத்தனர் விமர்சனங்களில்.
இதன் பின் இரண்டு டீமுக்கும் இணையதளங்களில் அடிக்கடி போர் மூள்வது வாடிக்கை. குறிப்பாக இருவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ரிலீஸாகையில் இந்த மோதல் உச்சம் பெறுமாம். ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸான நொடியிலிருந்து பத்துநொடிகளுக்குள் யார் வீடியோவுக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது? என்பதில் துவங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு தரப்புகளுக்குள்ளும் போட்டின்னா போட்டி அப்படியொரு போட்டி, மோதல்னா மோதல் அப்படியொரு மோதல்.
ஆனால் எப்போதுமே விஜய்தான் இதில் லீடிங்கில் லைக்ஸ் வாங்குவார். இதனால் மகேஷ் ரசிகர்கள் கொல காண்டில் இருப்பார்கள். இப்படியொரு சூழலில்தான் விஜய்யின் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் சிங்கிளும், மகேஷ்பாபுவின் ‘சர்க்காரு வாரி பாட்டா’வின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வரும் 14-ம் தேதி வெளியாகின்றன. இதில் அடிச்சு தூக்கப்போவது யார்? என்று இப்போதே கவுண்ட் டவுன் துவக்கிவிட்டனர் இரு தரப்பு ரசிகர்கள். வழக்கம் போல் விஜய்தான் என்று கமெண்ட்ஸ் விழுந்து வருகிறது.
இந்த நிலையில்தான் நேரடி தெலுங்கினுள் நுழையும் விஜய்யால் மகேஷின் புகழ் சறுக்கலாம் என்பது அவரது ரசிகர்களின் எண்ணம். அதனால்தான் அவருக்கு எதிராக ட்ரோல் வீடியோக்களை ஆரம்பித்து இப்போதே அவருக்கு எதிர்ப்பலையை உருவாக்கிட முயல்கிறார்கள்.” என்கிறார்கள்.
இதுக்கெல்லாம் அஞ்சுற ஆளா தளபதி?